Friday, March 18, 2011

ஆர்கிமிடிஸ் - 04

0
ஆர்கிமிடிஸ் - 04

           ஆர்கிமிடிசின் தாய் நாடான சிசிலி தீவிற்கு ரோமேனியர்கள் சுற்றி வளைத்து போர் தொடுப்பதற்கு தயாராக இருப்பதனால் சிசிலி தீவின் அரசர் ஆர்கிமிடிஸ் இற்கு அழைப்பு விடுத்து ரானுவா பொறியியலாளராக பொறுப்பேற்குமாறு கூறியிருந்தார். ஆர்கிமிடிசும் உடனே சிசிலி தீவிற்கு திரும்பினார்.




              நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பை அவர் உடனே ஏற்றுக்கொண்டார். கவன வைத்து கல் எரிவதை போல பேரும் பாறைகளை தூக்கி வீசும் கவன்களை அவர் உருவாக்கினார். அதே போல் கப்பலின் பாய்மர உச்சியை பிடித்து இழுத்து கப்பலையே கவிழ்க்கும் எரிகொளுவிகளை தங்களுடைய துறை முகத்தில் தொங்கவிட்டார். மிகப்பெரிய லென்சு கண்ணாடிகளை வைத்து சூரிய ஒளியை எதிரி கப்பல்களின் மீது பாய்ச்சி தீப்பற்ற செய்தார். ரோமேனிய கப்பல்களின் மீது பாறைகளை எந்திர கவண்கள் எறிந்து நொறுக்கின. எரிகொளுவிகள் கப்பல்களை கவிழ்த்தன. லென்சுகள் பாய்மரங்களை தீக்கிரையாக்கின. ரோமேனிய கடற்படை பெரும் சேதத்துடன் தோற்று ஓடியது. ஆர்கிமிடிசின் விஞ்ஞான கண்டுபிடிப்பினால் ரோமேனியர்கள் மிரண்டு போயினர்.



              பின்பு ரோமேனியர்கள் சிசிலிதீவின் நாளா பக்கமும் சுற்றி வளைத்து மாதகனகில் முற்றுகையிட்டனர். இதனால் சிசிலி தீவின் மக்கள் உணவின்றி பட்டினி கிடக்க நேரிட்டது. வேறு வழியின்றி சிசிலி ரோமேனியர்களிடம் சரணடைந்தது. ரோமேனிய படை சிசிலிதீவிற்குள் புகுந்தது.
               


ஆயினும் ரோமேனிய படை தலைவர் விஞ்ஞானியான ஆர்கிமிடிசுக்கு எந்த ஒரு தீங்கும் செய்யக் கூடாதென தனது படைகளுக்கு ஆணை இட்டிருந்தார்.




அடுத்தபதிவு ஒரு துக்கமான பதிவு .....................................
காத்திருங்கள்..............................................................................
உங்கள் 

No Response to "ஆர்கிமிடிஸ் - 04"

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

varalaaru Headline Animator

AD 1