Tuesday, March 15, 2011

ஆர்கிமிடிஸ் -02

0
ஆர்கிமிடிஸ் -02

ஆர்கிமிடிஸ் விடை காண தெரியாது சோர்வுற்று குளிப்பதற்கு தொட்டியில் நீரை நிரப்பி குளிக்க இறங்கினார் . அவர் தண்ணீர் தொட்டியில் இறங்கியதும் தண்ணீர் வெளியே வந்தது . அதை கவனித்து பார்த்த அவர் எதையோ கண்டுபிடித்து விட்டதாக கதவை திறந்து "யுரேக்கா ,யுரேக்கா " என கத்திக்கொண்டு வெளியில் நிர்வாணமாய் ஓடினார் .


அதாவது அவர் குளிப்பதற்கு நீர் தொட்டியில் இறங்கியதும் அதிலிருந்து வெளியேறிய நீர் தான் அதற்கு காரணம். அந் நீர் அவருக்கு ஒரு விடையை காட்டியது . அதாவது நீரில் இடப்பட்ட ஒவ்வொரு பொருளும் எவ்வளவு நீரை வெளித்தள்ளுகிறது என்பதை பொறுத்து அதன் விடையை காணலாம் . நீரின் ஏடையை விட குறைந்த எடை உள்ளதாக இருந்தால் அப்பொருள் மிதக்கும் . நீரின் எடையை விட அதிகமாய் இருந்தால் அந்தப்பொருளின் எடை அதிகமாய் இருந்தால் அது மூழ்கிவிடும் என்றார் ஆர்கிமிடிஸ் . 

அதற்கு உதாரணமாய் அவர் படகினை சுட்டி காட்டினார் .மிக பளுவான பொருட்களினால் கட்டப்பட்டிருக்கும் படகு நீரில் மிதக்கிறது .மொத்த நீரின் எடையை விட படகின் எடை குறைவாக இருப்பதே மிதப்பிற்கு காரணம் என்று ஆர்கிமிடிஸ் கூறினார் .

ஒரு சிறிய பாத்திரத்தில் நீரை நிரப்பி சுத்தமான தங்கத்தில் செய்த கிரீடத்தை அதில் போட்டால் குறித்த அளவான நீர் வெளியேறும் .அதே போல் சுத்த வெள்ளியால் செய்த கிரீடத்தை நீரில் போட்டால் குறித்த அளவான நீர் வெளியேறும் இரண்டிலும் ஏற்படும் வித்தியாசத்தை ஆதாரமாய் வைத்து அரசரின் கிரீடத்தில் வெள்ளி கலந்திருக்கிறதா என அறியமுடியும் என ஆர்கிமிடிஸ் கூறினார் . ஆர்கிமிடிசின் இந்த கண்டுபிடிப்பு எதிர் காலத்தில் பல கண்டுபிடிப்புகளுக்கு திறவு கோலாக இருந்தது . 

ஆம் அடுத்த பதிவு திறவு கோல் திறந்தது எதை என பார்க்கலாம் ......
உங்கள் 

No Response to "ஆர்கிமிடிஸ் -02"

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

varalaaru Headline Animator

AD 1