ஆர்கிமிடிஸ் - 03
ஆர்கிமிடிசின் அடுத்த கண்டுபிடிப்பு தான் நெம்பு கோல். ஒரு நீண்ட கோலின் ஒரு நுனியை பிடித்துக்கொண்டு ஒரு சிறுவன் நிற்கிறான் . ஒரு பெரிய ஆள் தஊக்க முடியாத பளுமிகுந்த ஒரு பொருளை கோலின் மற்றொரு நுனியால் தூக்கிட முடியும் .
அந்தசிறுவன் பயன்படுத்தும் கோல்தான் நெம்பு கோல் ஆகும் .ஒரு நுனியில் செலுத்தப்படும் விசையால் மறுநுனியில் உள்ள பொருளை நகர்த்த முடியும் . "அதிக நீளமான நெம்புகோல் ஒன்றை என்னிடம் கொடுத்து, நான் நிற்பதற்கு ஓர் இடமும் கொடுத்து விட்டால் மிகப்பெரிய நமது பூமியை கூட என்னால் நகர்த்தி விட முடியும்" என்றார் ஆர்கிமிடிஸ் .
ஆர்கிமிடிஸ் போன்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விஞ்ஞானிகள் பல்துறை அறிஞர்களாகவும் திகழ்ந்தனர் . பாலம் கட்டவும் , கோவில் கட்டவும் போருக்கு தேவையான படிக்கலாம் ஒன்றை தயாரிக்கவும் , குழந்தைகள் விளையாடும் சாமான்களை செய்யவும் கூட அக்காலத்தில் அரசர்கள் விஞ்ஞானிகளை அழைத்தனர் .
வயதான காலத்திலும் ஆர்கிமிடிஸ் அலேக்சன்றியாவில் ஆராய்சிகளை செய்வதும், மாணவர்களுக்கு போதிப்பதுமாய் இருந்து வந்தார் . திடீரென ஒரு நாள் அவரது தாய் நாட்டு அரசரிடம் இருந்து அழைப்பு வந்தது . ஏன் ?......................................
அடுத்தபதிவு வரை காத்திருங்கள் ........................
உங்கள்

No Response to "ஆர்கிமிடிஸ் - 03"
Post a Comment