Sunday, March 13, 2011

ஆர்கிமிடிஸ் -01

0
அனைவருக்கும் வணக்கம் !

இந்த வலை பூ உலகின் கடந்தகால நிகழ்வுகளையும் , விஞ்ஞானிகளையும்  பற்றி அலசி ஆராய உள்ளது .
அத்துடன் பதிவுகளுக்கு வாக்களித்து செல்லுங்கள் ............

இன்றைய முதல் பதிவு 2000 ஆண்டுக்கு முன் உலகில் வாழ்ந்த விஞ்ஞானி ...
ஆர்கிமிடிஸ் தொடர்பானது ..

ஆர்கிமிடிஸ் 


                            இவர் கிரேக்கத்தில் 2000 ம் ஆண்டுகளுக்கு முன்பு சிசிலித்தீவில் பிறந்தவர் . எகிப்தில் உள்ள அலெக்ஸ்சண்ட்ரியா பல்கலைகழகத்தில் கல்வி கற்றார் . கணிதம் மற்றும் தேற்றங்களையும் மணலில் எழுதி பார்த்து விடை கூறுவார் . அதனால் இவருக்கு மணல் கணக்காளர் என்று பெயரிட்டனர் .
                            
                             நைல் நதிக்கரையோரங்களில் விவசாயம் செய்து வந்த விவசாயிகளுக்கு ஒரு நீண்ட கால பிரச்சினை இருந்தது . மேட்டு நிலங்களுக்கு நீர் ஏறிப் பாய்வதில் சிக்கல் இருந்தது . ஆர்கிமிடிஸ் ஒரு பெரிய குழாயினுள் திருகு ஒன்றை மாட்டி அக் குழாயை  நீரில் அமிழ்த்தினார் . பின்பு திருகை சுழற்றினார் . ஆற்று நீர் குழாய் வழியே மேலேறி மேட்டு நிலங்களுக்கு பாய துவங்கியது .இக் கண்டுபிடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது .



மேல் உள்ள காணொளி சிறந்த முறையில் அதை விளக்குகிறது ....
                                  
                           இதை கேள்விப்பட்ட சிசிலித்தீவின் அரசர் ஆர்சிமிடிசை நாடு திரும்பச் செய்து அவரை விஞ்ஞான அமைச்சராக்கினார் .ஒரு நாள் அரசர் தனது கிரீடத்தை ஆர்கிமிடிசிடம் கொடுத்து "ஒரு இரத்தின வியாபாரியிடம் இதை விலை கொடுத்து வாங்கினேன் . இது சுத்த தங்கத்தால் செய்தது என்று சொல்கிறான் .இதில் வெள்ளியை கலப்படம் செய்திருப்பானோ என்று சந்தேகிக்கிறேன் .இதை எப்படியாவது நீங்கள் கண்டு பிடிக்க வேண்டும்"  என்று கேட்டுக் கொண்டார் .
      
                          ஆர்சிமிடிஸ் அந்த கிரீடத்தை கையில் வாங்கி அதை எடை நிறுத்து பார்த்தார் . பின்பு நெடு நேரம் யோசித்தும் அவருக்கு விடை கிடைக்கவில்லை .

ஆர்சிமிடிஸ் எவ்வாறு விடை பெற்றார் ...........
அடுத்த பாத்து வரை காத்திருங்கள் ......................
உங்கள் 




No Response to "ஆர்கிமிடிஸ் -01"

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

varalaaru Headline Animator

AD 1